

கீர்த்தி சுரேஷ், ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு ‘தோட்டம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ரிஷி சிவகுமார் எழுதி இயக்குகிறார்.
அதிரடி, ஆக்ஷன் அட்வென்சர் படமான இதில் இதுவரை ஏற்றிராத தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்கும் இப்படத்துக்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குநர் முகமது இர்ஃபான் தலைமையிலான குழு ஆக்ஷன் காட்சிகளை அமைக்கின்றனர். ஃபர்ஸ்ட் பேஜ் என்டர்டெயின்மென்ட், ஏவிஏ புரொடக்ஷன்ஸ் மற்றும் மார்கா என்டர்டெயினர்ஸ் நிறுவனங்கள் சார்பில் மோனு பழேதத், ஏவி அனூப், நாவல் விந்தியன், சிம்மி ராஜீவன் ஆகியோர் தயாரிக்கின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.