

கமல்ஹாசன் நடித்த ‘சத்யா’, ‘ஆளவந்தான்’ ரஜினியின் ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ உள்பட பல படங்களை இயக்கியவர் சுரேஷ்கிருஷ்ணா. இந்தி, தெலுங்கிலும் படங்களை இயக்கியுள்ளார். இவர் இப்போது புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து ‘அனந்தா’ என்ற படத்தை இயக்கி உள்ளார்.
இதில் ஜெகபதி பாபு, சுகாசினி மணிரத்னம், ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ஸ்ரீ ரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு பா.விஜய் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதியுள்ளார். இன்னர்வியூ நிறுவனம் சார்பில் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிக்கும் இப்படத்துக்கு தேவா இசை அமைத்திருக்கிறார்.
சஞ்சய் ஒளிப்பதிவு செய்கிறார். யதார்த்தம், உணர்ச்சி, தெய்வீக ஆற்றல் ஆகியவற்றுடன் ஐந்து கதைகள் இப்படத்தில் சொல்லப்படுகிறது.
சத்ய சாயி பாபாவின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு, நவ. 23 முதல் டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளது.