

வரும் பொங்கல் வெளியீடாக வருகிறது புதிய ‘பராசக்தி’. ரவி மோகன், அதர்வா முரளி போன்ற சீனியர்கள் படத்தில் இருந்தாலும் சிவகார்த்திகேயனின் நட்சத்திர மதிப்பை வைத்தே 90 நாள் விளம்பரப் பிரச்சாரத்தை முன்னதாகத் தொடங்கியிருக்கிறது படக்குழு.
திமுக ஆட்சியைக் கைப்பற்றக் காரணமாக இருந்த 60களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கதைக் களமாகக் கொண்ட இப்படத்தை ‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பின் இயக்கியிருக்கிறார் சுதா கொங்கரா.
சிவகார்த்திகேயனின் ‘பீரியட்’ தோற்றங்கள் வெளியாகி அவரது ரசிகர்களைக் கவர்ந்திருந்த நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘அடி அலையே’ என்கிற முதல் சிங்கிள் பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தின் இன்னோர் ஈர்ப்பாளர் அக்கட தேசத்தின் ‘குண்டூர் காரம்’ என்று புகழ்பெற்றிருக்கும் ஸ்ரீலீலா.