

நடிகர் பிரபாஸ் ரொமான்டிக் ஹாரர் காமெடி கதையைக் கொண்ட ‘த ராஜா சாப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மாருதி இயக்கியுள்ள இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகிறது. இதில் சஞ்சய் தத், பொமன் இரானி, மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியாததால் இதன் ரிலீஸ் தள்ளிப் போவதாகத் தெலுங்கு சினிமாவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்படத்தைத் தயாரிக்கும் பீப்பிள் மீடியா நிறுவனத்தின் டி.ஜி.விஸ்வபிரசாத், இதை மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2026-ம் ஆண்டு ஜன.9-ம் தேதி இந்தப் படம் வெளியாகும். அது ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்போது போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதனால் இப்படம் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். விரைவில் புரமோஷன் நிகழ்வுகள் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.