

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘த கேர்ள்ஃபிரண்ட்’. ரோகிணி, தீக் ஷித் ஷெட்டி, அனு இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். முதலில் இதில் சமந்தா நடிப்பதாக இருந்தது. அவர் விலகியதால் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் நவ. 7-ல் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்துக்காக, ரூ. 1 கோடி செலவில் காதல் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் யூடியூப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தை பார்த்த தயாரிப்பாளர்கள், இந்தப் பாடலைச் சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். கதையோட்டத்துடன் பொருந்தவில்லை என்று கூறி இப்பாடலை அவர்கள் நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.