

’சக்தி திருமகன்’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘சக்தி திருமகன்’. சில தினங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியிடப்பட்ட இப்படத்தினை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இது தொடர்பாக தனது கருத்தினை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
‘சக்தி திருமகன்’ தொடர்பாக இயக்குநர் ஷங்கர், “ஓடிடியில் ‘சக்தி திருமகன்’ பார்க்க நேர்ந்தது. சிந்திக்க வைக்கும் படம். இயக்குநர் எழுப்பிய கேள்விகள் மிகவும் நியாயமானதாகவும், மிகவும் சுவாரசியமாகவும் இருந்தன. இப்படத்தில் பல பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளன. இப்படத்தின் உள்ளடக்கத்தின் தீவிரம் எதிர்பாராத விதத்தில் பெரிதாகி வருகிறது. இயக்குநர் அருண் பிரபு மற்றும் விஜய் ஆண்டனி குழுவினருக்கு பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி நடித்து தயாரித்து வெளியிட்ட படம் ‘சக்தி திருமகன்’. அருண் பிரபு இயக்கத்தில் வெளியான இப்படத்தில் வாகை சந்திரசேகர், ‘காதல் ஓவியம்’ கண்ணன், திர்பதி ரவீந்திரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். செப்டம்பர் 19-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும், வசூல் ரீதியாக பெரிதாக எடுபடவில்லை.