

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர், 'திருமாங்கல்யம்'. ஒருகிராமத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண் அந்த கிராமத்துக்கே அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் பெண்ணாக இருக்கிறார். ஆனால் அவளது சித்தி, அவளை அவமானப்படுத்தி குடும்பத்தை விட்டு தள்ளி வைக்கிறாள். ஆனால் ஒரு கட்டத்தில் அவளால் தான் தனது குடும்பத்துக்கே அதிர்ஷ்டம் என தெரிய வருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
கதையின் நாயகியாக லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் மேக்ஹா நடிக்கிறார். நாயகனாக திரு என்ற கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். மேலும் திருவின் காதலியாக திவ்யா என்ற கதாபாத்திரத்தில் காயத்திரி ஸ்ரீ நடிக்கிறார்.
மேலும், மதுமோகன், சசி லயா, வனிதா, ஆடிட்டர் ஸ்ரீதர், வரலட்சுமி, கவிதா, கவுதம், காவேரி, தினேஷன், டேவிட் மனோ, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகள், காதல், விதி ஆகியவற்றின் கலவையுடன் உருவாகியுள்ள இத்தொடர் நவ. 3-ம்
தேதியில் இருந்து திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப் பாகிறது.