“சரவெடி ஆயிரம் பத்தணுமா” - ’கருப்பு’ முதல் சிங்கிள் எப்படி? 

“சரவெடி ஆயிரம் பத்தணுமா” - ’கருப்பு’ முதல் சிங்கிள் எப்படி? 
Updated on
1 min read

சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, நட்டி, ஷிவதா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

பாடல் எப்படி? - சூர்யாவின் இன்ட்ரோ பாடலாக இது இருக்கலாம். அதற்கேற்ற வகையில் மாஸ் ஆன இசையும், வரிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. பல இடங்களில் லிரிக்ஸ் புரியவில்லை என்றாலும் திரையரங்குகளில் சூர்யா ரசிகர்களுக்கு இந்த பாடல் கொண்டாட்டமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. விஷ்ணு எடவனின் சரவெடி ஆயிரம் பத்தணுமா…
சுருட்டொரு லாரியா கொட்டட்டுமா… கெடாகறி நெத்திலி வஞ்சரமா… படையல நெறப்பி தள்ளட்டுமா…
என்ற வரிகள் கவனம் ஈர்க்கின்றன. ‘காட் மோட்’ பாடலின் லிரிக்கல் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in