Published : 11 Jul 2018 08:21 AM
Last Updated : 11 Jul 2018 08:21 AM

அக்டோபரில் சிம்புவின் ‘மாநாடு’

ஜெய், சிவா, ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோருடன் சத்யராஜ் இணைந்து நடித்துள்ள படம் ‘பார்ட்டி’. பிஜி தீவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, சிம்பு நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார் வெங்கட் பிரபு. அரசியலை மையமாகக் கொண்ட இப்படத்துக்கு ‘மாநாடு’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

இதில் சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இருவரில் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை. முழு படத்தின் கதையை எழுதி முடித்த பிறகே நடிகை குறித்து முடிவு செய்யப்படும் என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். அக்டோபரில் தொடங்க உள்ள இப்படம் அடுத்த கோடை விடுமுறைக்கு வர உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x