Published : 11 Jul 2018 08:24 AM
Last Updated : 11 Jul 2018 08:24 AM

ஹன்சிகா படத்தில் ஜிப்ரான் இசை

நடிகை ஹன்சிகா, தற்போது ‘துப்பாக்கி முனை’, ‘100’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், நாயகியை மையமாகக் கொண்ட கதைகளைக் கேட்பதில் அவர் கடந்த சில மாதங்களாக கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் புதிய படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். அவர் இசையமைத்துள்ள ‘விஸ்வரூபம் 2’ அடுத்த மாதம் வெளிவர உள்ள நிலையில், தற்போது ஹன்சிகாவின் படத்துக்கு அவர் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்துக்கான வேலைகள் விரைவில் தொடங்க உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x