‘போர் தொழில்’ விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ்!

‘போர் தொழில்’ விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ்!

Published on

சரத்குமார், அசோக் செல்வன் நடித்த ‘போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா, அடுத்து இயக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார்.

கே.எஸ்.ரவிகுமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்வி பாண்டியராஜன் உள்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in