தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் சுரேஷ் ரெய்னா!
அறிமுக இயக்குநர் லோகன் இயக்கும் படம் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நடிகராகிறார். இந்தப் படத்தை ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் என்ற புதிய பட நிறுவனம் மூலம் டி. சரவணகுமார் தயாரிக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சந்தீப் கே. விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். நிகழ்வில் வீடியோ மூலம் பேசிய சுரேஷ் ரெய்னாவிடம் அவருடைய தோழரான எம்.எஸ். தோனியும் இதில் நடிக்க வாய்ப்பிருக்கிறதா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு “தோனிதான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்” என்றார்.
சென்னையில் நடந்த இதன் தொடக்க விழாவில் கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே கலந்துகொண்டார்.
