Published : 17 Jul 2018 02:08 PM
Last Updated : 17 Jul 2018 02:08 PM

சல்மான் கான் ரியாலிட்டி ஷோவில் கமல்ஹாசன்

சல்மான் கான் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோவான ‘தஸ் க தம்’மில், சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ ‘தஸ் க தம்’. சோனி டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில், கமல்ஹாசன் மற்றும் பூஜா குமார் இருவரும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளனர்.

கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள படம் ‘விஸ்வரூபம் 2’. ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்தப் படம், ‘விஸ்வரூப் 2’ என்ற பெயரில் இந்தியிலும் அதே தேதியில் வெளியாக இருக்கிறது. அதனை புரமோஷன் செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் கமல்ஹாசன்.

2013-ம் ஆண்டு ‘விஸ்வரூப்’ வெளியானபோது, பாலிவுட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அப்போது கமல்ஹாசனுக்கு ஆதரவாக இருந்தவர்களில் சல்மான் கானும் ஒருவர். 5 வருடங்களுக்குப் பிறகு ‘விஸ்வரூப் 2’ படத்துக்கும் ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார் சல்மான் கான்.

இருவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, இந்தியில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 7 சீஸன்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் சல்மான் கான். கமல்ஹாசன் தமிழில் தற்போது இரண்டாவது சீஸனைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x