Published : 25 Jul 2018 04:13 PM
Last Updated : 25 Jul 2018 04:13 PM

விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’யில் பாரதிராஜா

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ படத்தில், இயக்குநர் பாரதிராஜா நடித்துள்ளார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், மறுபடியும் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள படம் ‘சீதக்காதி’. இந்தப் படத்தில் வயதான நாடக நடிகர் வேடத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அவருடைய 25-வது படம் இது.

இயக்குநர் மகேந்திரன், பார்வதி, அர்ச்சனா, காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன், பாரதிராஜாவும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இயக்குநராகவே கெஸ்ட் ரோலில் அவர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

ரம்யா நம்பீசனும் இந்தப் படத்தில் நடிகையாக கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பா - மகன் என முதன்முறையாக இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x