பாலிவுட்
ஆமிர்கானின் ‘சித்தாரே ஜமீன் பர்’ தமிழ் டிரெய்லர் வெளியீடு!
பிரபல இந்தி நடிகர் ஆமிர்கான், நடித்துள்ள படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. ஆர். எஸ். பிரசன்னா இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஜெனிலியா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமஸ் மிஸ்ரா உட்பட பலர் நடித்துள்ளனர். னிவாஸ் ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 20-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.
இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகிறது. இந்நிலையில் இதன் தமிழ் டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது.
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு கூடைப்பந்து விளையாட்டுப் பயிற்சியாளராக நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார், ஆமீர் கான். அங்கு அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாகச் சொல்லும் படம் இது. >>டிரெய்லரை காண
