‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மே 24-ல் ஜப்பானில் ரிலீஸ்!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மே 24-ல் ஜப்பானில் ரிலீஸ்!
Updated on
1 min read

சசிகுமார் நடித்துள்ள ’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மே 24-ம் தேதி ஜப்பானில் வெளியாகவுள்ளது.

மே 1-ம் தேதி ‘ரெட்ரோ’ படத்துடன் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. முதல் நாளில் குறைவான வசூலே இருந்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.50 கோடியை கடந்துவிட்டது. மேலும் கேரளா, கர்நாடகா மட்டுமன்றி அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை ஜப்பானிலும் வெளியிடவுள்ளது படக்குழு. மே 24-ம் தேதி ஜப்பானிலும் வெளியாகும் என்று இப்படத்தின் வெளிநாட்டு விநியோகஸ்தரான அகிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மூன்று மடங்கு லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம்.

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இதனை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் வெளியிட்டது. இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார்.

New destination unlocked: JAPAN! #TouristFamily continues its worldwide adventure, reaching audiences further than ever. Tickets open this weekend — don’t miss the TAMIL FILM OF THE YEAR!

Worldwide release (excl. India) by @vithurs_ @MillionOffl @Yuvrajganesanpic.twitter.com/XYw1hWBQvB

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in