ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் ஃபோலி காலமானார்

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் ஃபோலி காலமானார்

Published on

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் ஃபோலி (james foley). 1984-ல் வெளியான ரொமான்டிக் டிராமா படமான 'ரெக்லெஸ்' மூலம் தனது இயக்குநர் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தொடர்ந்து 'அட் க்ளோஸ் ரேஞ்ச்' (1986), ஹூ இஸ் தேட் கேர்ள் (1987), ஆஃப்டர் டார்க், மை ஸ்வீட் (1990), பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் டார்கர்’ என பல படங்களை இயக்கியுள்ளார்.

சின்னத்திரை தொடர்களையும் இயக்கியுள்ளார். மடோனாவின் ‘லிவ் டு டெல்’ என்ற பிரபல இசை வீடியோவையும் இயக்கி இருக்கிறார். மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காகச் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 71. அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in