சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பது ஏன்? - பிரியா பிரகாஷ் வாரியர் விளக்கம்

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பது ஏன்? - பிரியா பிரகாஷ் வாரியர் விளக்கம்

Published on

“எப்போதும் என் மீது கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை” என்று நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தெரிவித்துள்ளார்.

‘ஒரு அடார் லவ்’ படத்தின் மூலம் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். தமிழில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தொடர்ச்சியாக தமிழில் நடிக்க ஆர்வம் தெரிவித்திருக்கிறார் பிரியா பிரகாஷ் வாரியர்.

தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து பிரியா பிரகாஷ் வாரியர் கூறும்போது, “அடுத்தடுத்து நடிக்க இருக்கும் படங்களை கவனமுடன் தேர்ந்தெடுத்தெடுக்கப் போகிறேன். இயக்குநர் மணிரத்னம் படத்தில் பணியாற்ற வேண்டும். ஆக்‌ஷன் ரோலிலும் நடிக்க வேண்டும். சினிமாவில் அடுத்தடுத்து உயரங்கள் தொடுவதுதான் மகிழ்ச்சி.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதும் எனது கரியரில் ஒரு பகுதிதான். எப்போதும் என் மீது கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் செய்வதில் முழு கவனம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in