Published : 09 May 2025 01:33 PM
Last Updated : 09 May 2025 01:33 PM
சென்னை: இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளிவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார். இதில் த்ரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் கமல்ஹாசன் தனது ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் தேதியை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது நாட்டின் எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலைகள் மற்றும் உயர்ந்த பாதுகாப்பு நிலையை முன்னிட்டு, மே 16 ஆம் தேதி நடைபெறவிருந்த ‘தக்லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நமது ராணுவ வீரர்கள் துணிச்சலோடு எல்லையில் தங்கள் கடமையை செய்து வரும் நிலையில், இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல, மாறாக அமைதியான ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் என நாங்கள் நம்புகிறோம். புதிய தேதி விரைவில், சூழ்நிலைக்கு ஏற்றாற்போல அறிவிக்கப்படும்.
இந்த நேரத்தில், நமது நாட்டின் பாதுகாப்புக்காக காத்திருக்கின்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை பற்றி நாம் எண்ணுகிறோம். ஒரு நாட்டின் குடிமக்களாக, நாம் பொறுமையுடனும் ஒற்றுமையுடனும் பதிலளிக்க வேண்டியது நமது கடமை.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT