நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக் குறைவால் காலமானார்

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக் குறைவால் காலமானார்
Updated on
1 min read

சென்னை: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி இன்று (மே.5) காலை காலமானார். அவருக்கு வயது 67.

தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகராகத் தொடங்கி, குணச்சித்திர கதாபாத்திரங்கள், கதாநாயகன் எனப் பல்வேறு பரிமாணங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றிருப்பவர் நடிகர் கவுண்டமணி. இவர் சாந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு செல்வி, சுமித்ரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

கவுண்டமணியின் மனைவி சாந்தி கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் அவதியுற்று வந்தததாகத் தெரிகிறது. இந்நிலையில், சாந்தி இன்று காலை 10.30 மணி அளவில் உயிரிழந்தார். அவரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் பலரும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, கவுண்டமணிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

நாளை காலை 11.30 மணியளவில், சென்னை பெசன்ட் நகரிலுள்ள மின் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in