Published : 25 Apr 2025 11:48 PM
Last Updated : 25 Apr 2025 11:48 PM
2017 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு அடார் லவ்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.
அப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் சில நொடிகளே வரும் ஒரு காட்சியின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பல லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
அண்மையில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
90களில் சிம்ரன் ஆடிய ஹிட் பாடலான ‘தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு இப்படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் நடனமாடியிருந்தார்.
சிம்ரனின் நடனத்தை அப்படியே ரீகிரியேட் செய்திருப்பதாக ரசிகர்கள் பலரும் பிரியா பிரகாஷ் வாரியரை பாராட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT