‘சென்ட்ரல்’ முதலாளித்துவத்துக்கு எதிரான படம்

‘சென்ட்ரல்’ முதலாளித்துவத்துக்கு எதிரான படம்

Published on

ஸ்ரீரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் சார்பில் வியாப்பியன் தேவராஜ், சதாகுமரகுரு, தமிழ் சிவலிங்கம் இணைந்து தயாரித்துள்ள படத்துக்கு ‘சென்ட்ரல்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அறிமுக இயக்குநர் பாரதி சிவலிங்கம் இயக்கியுள்ளார். ‘காக்கா முட்டை’ விக்னேஷ் இதன் கதையின் நாயகனாகவும் சோனேஸ்வரி நாயகியாகவும் நடித்துள்ளனர். பேரரசு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். சித்தா தர்ஷன், ஆறுபாலா, மேதகு ராஜா, அன்பு ராணி, கவிநிலவன், ஓம் கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். வினோத் காந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இலா இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி பாரதி சிவலிங்கம் கூறும்போது, “ இது முதலாளித்துவத்துக்குஎதிரான படம். ஒரு கிராமத்திலிருந்து குடும்பச் சூழ்நிலை காரணமாக சென்னை சென்ட்ரலுக்கு வேலைக்கு வரும் நாயகன், முதலாளித்துவம் என்ற பெயரால் என்ன மாதிரியான கஷ்டங்களை அனுபவிக்கிறான். அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறோம்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in