Published : 07 Jul 2018 10:48 PM
Last Updated : 07 Jul 2018 10:48 PM

பயணக் கதையில் பாரதிராஜா

பாரதிராஜா நடித்து இயக்கியுள்ள ‘ஓம்’ படத்தின் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். வாழ்ந்து முடித்த ஒரு பெரியவருக்கும், வாழ்க்கையைத் தொடங்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே நடக்கும் சம்பவகள்தான் இப்படத்தின் களம். முழுக்க பயணம் சார்ந்த திரைக்கதை. முக்கிய காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல், தேனி உள்ளிட்ட இடங்களில் தொடங்கி லண்டன், இத்தாலி எனப் பல முக்கிய இடங்களில் படமாக்கப்பட்ட இப்படம் தனது நடிப்புத் தீனிக்கு சரியான படமாக இருக்கும் என்று நம்பு கிறார் இயக்குநர் பாரதிராஜா. தனது மகனின் பெயரிலான மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் படத்தை தயாரித்துள்ள பாரதிராஜா தற்போது அதன் ரிலீஸ் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x