ராஷ்மிகா உடனான வயது வித்தியாசம் - சல்மான் கான் சொன்ன பதில்!

ராஷ்மிகா உடனான வயது வித்தியாசம் - சல்மான் கான் சொன்ன பதில்!
Updated on
1 min read

நாயகி உடனான வயது வித்தியாசம் தொடர்பன கேள்விக்கு நடிகர் சல்மான் கான் பதிலளித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், சத்யராஜ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிக்கந்தர்’. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.

அப்போது “நாயகி உடனான வயது வித்தியாசம்” குறித்து சல்மான் கானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “வயது வித்தியாசம் அதிகம் இல்லை. அவருக்கும் எனக்கும் 31 வயது வித்தியாசம் என்பது தெரியும். கதாநாயகிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருடைய அப்பாவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

விரைவில் ராஷ்மிகா திருமணம் செய்து கொள்வார். அவர் ஒரு மகளுக்கு தாயாகலாம். அவர் வளர்ந்ததும், அவருடனும் பணிபுரிவேன். ராஷ்மிகா அதை ஒப்புக் கொள்வார் என நினைக்கிறேன்” என்று பதிலளித்தார். இதற்கு ராஷ்மிகா சிரித்துக் கொண்டே சம்மதம் தெரிவித்தார்.

‘சிக்கந்தர்’ திரைப்படம் மார்ச் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் ட்ரெய்லருக்கு இணையத்தில் கலவையான விமர்சனங்கள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in