காதலரை கரம்பிடிக்கும் ‘நாடோடிகள்’ அபிநயா!

காதலரை கரம்பிடிக்கும் ‘நாடோடிகள்’ அபிநயா!

Published on

நீண்ட நாள் காதலருடன் ‘நாடோடிகள்’ நடிகை அபிநயாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களாக முன்னணி நடிகரை காதலித்து வருகிறார் அபிநயா என்று செய்திகள் பரவியது. அதற்கு அபிநயா தான் நீண்ட வருடங்களாக ஒருவரை காதலித்து வருவதாகவும், நடிகருடன் வெளியாகி இருக்கும் செய்தி வதந்தி எனவும் குறிப்பிட்டார். தற்போது தனது நீண்ட நாள் காதலருடன் அபிநயாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பது குறித்து அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “Ring the bells, count the blessings—forever starts today! #Engaged #BellsAndBlessings” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

செவித் திறன், பேச்சுத் திறன் இல்லாத மாற்றுத் திறன் நடிகை அபிநாயா. ஆனால், தனது திறமையால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானார் அபிநயா. அப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ’ஈசன்’, ‘7-ம் அறிவு’, ‘வீரம்’, ‘பூஜை’, ‘தாக்க தாக்க’, ‘குற்றம் 23’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

திருமண நிச்சயதார்த்தம் குறித்து அபிநயா குறிப்பிட்டிருந்தாலும் கூட இதுவரை தனது காதலர் இவர்தான் என முகம் காட்டி அபிநயா அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

A post shared by M.g Abhinaya (@abhinaya_official)

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in