Published : 31 Jul 2018 05:54 PM
Last Updated : 31 Jul 2018 05:54 PM

“யுவன் சங்கர் ராஜா எனக்கு அப்பா மாதிரி” - சிம்பு

‘யுவன் சங்கர் ராஜா எனக்கு அப்பா மாதிரி’ எனத் தெரிவித்துள்ளார் சிம்பு.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முதன்முதலாகத் தயாரித்திருக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. இளன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைஸா வில்சன் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். யுவனே இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 29) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சிம்பு, “இந்த விழா இசை வெளியீட்டு விழா போல இல்லாமல், சினிமா பிரபலங்களின் கெட் டு கெதர் போல் இருக்கிறது.

நானும் யுவனும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி தான். யுவன் எனக்கு அப்பா மாதிரி. அப்பா மாதிரி என்னைப் பார்த்துக் கொள்வார். எதிரி கூட நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் யுவன். அவருக்காகச் சேர்ந்த கூட்டம் தான் இது” என்றார்.

யுவனின் முதல் தயாரிப்பு என்பதால், நிறைய பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதுவரை யுவனின் பட விழாக்களில் கலந்து கொள்ளாத இளையராஜா கூட இந்த விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x