Published : 18 Jul 2018 06:37 PM
Last Updated : 18 Jul 2018 06:37 PM

ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நவாஸுதீன் சித்திக், சிம்ரன் ஒப்பந்தம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நவாஸுதீன் சித்திக் மற்றும் சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

‘காலா’வைத் தொடர்ந்து ரஜினி நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு டெஹாராடூனில் நடைபெற்று வருகிறது.

ரஜினியுடன் நடித்து வருபவர்கள் பட்டியலியை அதிகாரபூர்வமாக அவ்வப்போது தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது நவாஸுதீன் சித்திக் மற்றும் சிம்ரன் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

ரஜினி படத்தில் நவாஸுதீன் சித்திக் நடிப்பதை 'இந்து தமிழ்' இணையதளம் முன்பே செய்தியாக வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.

விரிவான செய்திக்கு: கார்த்திக் சுப்பாராஜ் படத்தில் பாலிவுட் நடிகருடன் மோதும் ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்பராஜ்- ரஜினி படத்தில் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் திரு ஆகியோர் பணியாற்றுகின்றனர். மேலும், பாபி சிம்ஹா, அஞ்சலி, சனந்த் ரெட்டி ஆகியோரும் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை.

தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி - சிம்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு படமாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x