Published : 15 Jul 2018 05:01 PM
Last Updated : 15 Jul 2018 05:01 PM

அஞ்சலி படத்தில் யோகிபாபு

அஞ்சலி நடிக்கும் ‘லிசா’ படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார் யோகிபாபு.

ராஜு விஸ்வநாத் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லிசா’. இந்தியாவிலேயே ஸ்டீரியோஸ்கோப் 3டி டெக்னாலஜியில் உருவாகும் முதல் படம் இது. ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் படம் இது. இவர் ஏற்கெனவே ‘ராஜா மந்திரி’ படத்தைத் தயாரித்துள்ளார்.

ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், அஞ்சலி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். சாம் ஜோன்ஸ் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். பிரபல எழுத்தாளரான மகரந்த் தேஷ்பாண்டே, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் யோகிபாபுவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நயன்தாராவுடன் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துள்ள யோகிபாபு, மீண்டும் அவருடன் இணைந்து கே.எம்.சர்ஜுன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். மேலும், அஜித்தின் ‘விசுவாசம்’ படத்திலும் நடித்து வருகிறார்.

அஞ்சலி நடிப்பில் ‘பேரன்பு’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. மேலும், சசிகுமார் ஜோடியாக ‘நாடோடிகள் 2’, ‘காண்பது பொய்’, ‘ஓ’, ‘கீதாஞ்சலி 2’, ‘குண்டூர் டாக்கீஸ் 2’, பெயரிடப்படாத விஜய் சேதுபதி படம் ஆகியவற்றில் தற்போது நடித்து வருகிறார்.

“மக்களின் வலிகளையும் சந்தோஷத்தையும் பாடுவதற்குத்தான் நாங்க இருக்கோம்” - செந்தில் கணேஷ் பேட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x