இணையத்தில் கசிந்தது ‘த ராஜா சாப்’ பட காட்சிகள் படக்குழு அதிர்ச்சி!

இணையத்தில் கசிந்தது ‘த ராஜா சாப்’ பட காட்சிகள் படக்குழு அதிர்ச்சி!

Published on

பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம், ‘த ராஜா சாப்’. ரொமான்டிக் ஹாரர் காமெடி படமான இதை மாருதி இயக்குகிறார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார், சஞ்சய் தத் என பலர் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தமன் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சியில் மாளவிகா மோகனன் சமீபத்தில் நடித்துள்ளார். காய்கறி மார்க்கெட்டில் நடப்பது போன்ற அந்தக் காட்சியில் அவர் சிலரை மேலிருந்து குதித்துத் தாக்குவது போல படமாக்கப்பட்டது. அந்தப் படப்பிடிப்பு வீடியோ, சமூக வலைதளங்களில் திடீரென கசிந்துள்ளது. இது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in