

‘விலங்கு’ இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டிய ராஜ், அடுத்து இயக்கும் படத்துக்கு ‘மாமன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயப்பிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் என பலர் நடிக்கின்றனர்.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரிக்கிறார்.
“ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவைப் பேசும் படைப்பாக இப்படம் தயாராகி வருகிறது. ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகும் இதன் படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது” என்றது படக்குழு. இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.