“2 நாட்களாக கண்ணீருடன் இருந்தேன்” - ‘மதகஜராஜா’ வரவேற்பு குறித்து சுந்தர்.சி நெகிழ்ச்சி!

“2 நாட்களாக கண்ணீருடன் இருந்தேன்” - ‘மதகஜராஜா’ வரவேற்பு குறித்து சுந்தர்.சி நெகிழ்ச்சி!
Updated on
1 min read

சென்னை: ‘மதகஜராஜா’ படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கடந்த 2 நாட்களாக கண்களில் கண்ணீருடன் தான் இருந்தேன் என்று இயக்குநர் சுந்தர்.சி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திரையரங்கு ஒன்றுக்கு வருகை தந்த சுந்தர்.சி பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ’மதகஜராஜா’ படம் 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. போன கும்பமேளாவுக்கு வரவேண்டிய படம், இந்த ஆண்டு வந்துள்ளது. படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கடந்த 2 நாட்களாக கண்களில் கண்ணீருடன் தான் இருந்தேன். கிட்டத்தட்ட நூற்றுக்கு நூறு சதவீதம் பாசிட்டிவ் விமர்சனம் வந்த படம் என்றால் எனக்கு தெரிந்து அது இதுதான். இப்படம் மட்டுமின்றி இந்த பொங்கலுக்கு வெளியான எல்லா படமும் பெரிய வெற்றி பெறவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

3 மாதங்களுக்கு முன்பே இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு இந்த பொங்கலுக்கு கிட்டத்தட்ட 10 நாட்கள் விடுமுறை வந்தது. அதனால் அதற்கு ஏற்றபடி ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டோம்” இவ்வாறு சுந்தர்.சி தெரிவித்தார்.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான படம் ‘மதகஜராஜா’. பல்வேறு பிரச்சினைகளை கடந்து 12 ஆண்டுகள் கழித்து இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு யாருமே எதிர்பாராத விதமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படம் தான் 2025-ம் ஆண்டு முதல் வெற்றியாக இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் கணித்திருக்கிறார்கள். சோனு சூட், மறைந்த இயக்குநர் மணிவண்ணன், மறைந்த இயக்குநர் மற்றும் நடிகர் மனோபாலா, சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட விஷாலுடன் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ள இப்படத்தினை ஜெமினி நிறுவனம் தயாரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in