ரஜினியின் ‘கூலி’ படம் ரிலீஸ் குறித்து படக்குழு முடிவு!

ரஜினியின் ‘கூலி’ படம் ரிலீஸ் குறித்து படக்குழு முடிவு!

Published on

ரஜினி நடித்து வரும் 'கூலி’ படத்தின் வெளியீட்டு திட்டங்கள் என்ன என்பது தெரியவந்துள்ளது.

விசாகப்பட்டினம், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டது ‘கூலி’ படக்குழு. தற்போது தாய்லாந்தில் சில காட்சிகளை படமாக்க பயணித்துள்ளது. அங்கு 25 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து சென்னையிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதன் படப்பிடிப்பு மார்ச்சில் தான் முடியும் என கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இறுதிகட்டப் பணிகளை துரிதப்படுத்தி படத்தினை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடலாம் என திட்டமிட்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் ‘ஜெயிலர்’ வெளியாகி பெரும் வெற்றியைக் கொடுத்த மாதம் என்பதால், இந்த முடிவுக்கு அவர்களும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பான அறிவிப்பு பொங்கல் பண்டிகைக்கு வர வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதனை முடித்துவிட்டு அடுத்ததாக ‘கைதி 2’ படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in