Published : 07 Jul 2018 03:39 PM
Last Updated : 07 Jul 2018 03:39 PM

தாய்லாந்து எல்லையில் படமாகும் விஜய் சேதுபதி படம்

விஜய் சேதுபதி நடித்துவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு, தாய்லாந்து எல்லையில் படமாக இருக்கிறது.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, எஸ்.யு.அருண் குமார் இருவரும் மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். ‘சேதுபதி’ படத்துக்கு இசையமைத்த நிவாஸ் கே பிரசன்னா, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தென்காசியில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தாய்லாந்து எல்லையில் சில காட்சிகளைப் படமாக்க இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதுதான் ‘ஜுங்கா’ படத்துக்காக பாரிஸ் சென்று நடித்தார் விஜய் சேதுபதி. அதைத் தொடர்ந்து தாய்லாந்து செல்ல இருக்கிறார். கோகுல் இயக்கியுள்ள ‘ஜுங்கா’ படத்தில், சயிஷா மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய  இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், வெளிநாட்டில் வசிக்கும் டான் வேடத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x