உண்மை சம்பவ பின்னணியில் ‘துணிந்தவன்’!

உண்மை சம்பவ பின்னணியில் ‘துணிந்தவன்’!

Published on

இந்திரன்ஸ், ஜாபர், ஜானி ஆண்டனி, ஐ.என்.விஜயன், சுதீஷ், டயானா ஹமீத், அபர்ணா சிவதாஸ் உட்பட பலர் நடித்துள்ள படத்துக்கு 'துணிந்தவன்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை சுஜீஷ் தக்‌ஷணா காசி - ஹரிநாராயணன் இயக்கியுள்ளனர்.

தக்‌ஷணா காசி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். உன்னி நம்பியார் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் மலையாளத்தில் ‘ஒறும்பேட்டவன்’ என்ற பெயரில் ஜன. 3-ம் தேதி வெளியாகிறது. ஜனவரி 2-ம் வாரம் தமிழில் வெளியாகிறது. 10 வயது சிறுமியை மையப்படுத்திய கதை இது. சிறுமியாகத் தயாரிப்பாளரின் மகள் காஷ்மீரா நடித்துள்ளார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் இது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in