Published : 10 Jul 2018 12:01 PM
Last Updated : 10 Jul 2018 12:01 PM

‘தமிழ்ப்படம் 2’வில் மாதவன், விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, சித்தார்த், பிரேம்ஜி

‘தமிழ்ப்படம் 2’வில் மாதவன், விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, சித்தார்த், பிரேம்ஜி ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தமிழ்ப்படம் 2’. சிவா, திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில், ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் கஸ்தூரி.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப் படத்தை, ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரித்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் இசையமைத்துள்ளார். வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 12) இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

இதன் முதல் பாகம், 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இரண்டாம் பாகமோ 15 நிமிடங்கள் குறைவாக, அதாவது 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஓடும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முதல் பாகத்தைவிட இந்தப் பாகத்தில் கிண்டல் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பலரை கலாய்த்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், மாதவன், விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, சித்தார்த், பிரேம்ஜி ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x