‘ராம் சரணுக்கு தேசிய விருது நிச்சயம்’ - புஷ்பா இயக்குநர் சுகுமார் உறுதி

‘ராம் சரணுக்கு தேசிய விருது நிச்சயம்’ - புஷ்பா இயக்குநர் சுகுமார் உறுதி

Published on

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹிரோவாக நடித்துள்ள படம், ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம், ஜன.10-ம் தேதி வெளியாகிறது.

இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ‘புஷ்பா’ இயக்குநர் சுகுமார், “இந்தப் படத்தில் ராம் சரண் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும்" என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “ராம் சரண் எனது சகோதரர் போன்றவர். அவருடன் பணியாற்றுவது எப்போதுமே மகிழ்ச்சிதான். சிரஞ்சீவி சாருடன் இந்தப் படத்தை நான் பார்த்தேன். அதனால், முதல் விமர்சனத்தை சொல்ல விரும்புகிறேன். முதல் பாதி அருமை, இடைவேளை, ‘பிளாக்பஸ்டர்’, ‘பிளாஷ்பேக்’ என்னை சிலிர்க்க வைத்தது. ஷங்கர் சாரின் ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’ படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தை மிகவும் ரசித்தேன். நான் இயக்கிய ‘ரங்கஸ்தலம்’ படத்துக்காக, ராம் சரணுக்குத் தேசிய விருது கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால், ‘கேம் சேஞ்சர்’ படத்துக்காக அவருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in