ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ ட்ரெய்லர் எப்படி? - மிரட்டலான சம்பவங்கள்! 

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ ட்ரெய்லர் எப்படி? - மிரட்டலான சம்பவங்கள்! 
Updated on
1 min read

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சொர்க்கவாசல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: கலவரத்துடனேயே தொடங்குகிறது ட்ரெய்லர். ஒருபுறம் காவல்துறையின் படையெடுப்பு, மறுபுறம் சிறை வளாகத்தில் நடக்கும் பிரச்சினைகள் என சூடுபிடிக்கிறது. “இந்திய சிறைத்துறை வரலாற்றிலேயே இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை” என்ற நட்டியின் குரல் ஒலிக்க அவரது வித்தியாசமான தோற்றம் கவனம் பெறுகிறார். அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இன்ட்ரோ. “நரகத்துல இருக்குற எல்லோர்கிட்டையும், சொர்க்கத்துக்கு ஒரு சாவி இருக்குன்னு சொன்னா அவங்க கண்டுபிடிக்காமல இருப்பாங்க.

அவங்களுக்கு சொர்க்கம் போற ஆசையில்ல, நரக்கத்துல இருந்து தப்பிக்கணும் வெறி” என்ற வசனம் அழுத்தமாக எழுத்தப்பட்டுள்ளது. செல்வராகவன் அட்டகாசமான தோற்றம், ஹக்கிம் ஷாவின் வில்லத்தனம், காவல்துறை அதிகாரியான கருணாஸ் கதாபாத்திரங்கள் ஈர்க்கின்றன. ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பின் அடுத்த கட்ட பரிணாமம் ட்ரெய்லரில் பிரதிபலிக்கிறது. இறுதியில் அவர் அழும் காட்சி அதை உறுதி செய்கிறது. மொத்த ட்ரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சொர்க்கவாசல்: பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த சித்தார்த் விஸ்வானந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சொர்க்கவாசல்’. இயக்குநருடன் இணைந்து, எழுத்தாளர் தமிழ் பிரபா படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார். படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார். பிரின்ஸ் ஆன்டர்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை செல்வா கவனிக்கிறார். செல்வராகவன், நட்டி, ஹக்கிம் ஷா, சானியா ஐய்யப்பன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in