Published : 06 Jun 2018 09:03 PM
Last Updated : 06 Jun 2018 09:03 PM

பாஜகவில் நான் சேர்ந்துவிட்டதாக அவதூறு பரப்புவதா?- வரலட்சுமி சரத்குமார் காட்டம்

நான் பாஜக மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் இன்று வரலட்சுமி சரத்குமாரை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்பின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதனால் வரலட்சுமி பாஜகவில் சேர்ந்துவிட்டார் என்று ஒரு தகவல் பரவியது.

இந்நிலையில் தான் பாஜகவில் சேரவில்லை என்று வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''பெண்கள் பாதுகாப்பு மற்றும் பிற விஷயங்களில் பாஜக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து முரளிதரராவிடம் பேசினோம். அது மிகச் சிறந்த சந்திப்பாக அமைந்தது. பிரதமர் மோடி எங்களின் கருத்துகளையும் அறிந்துகொள்ள விரும்புகிறார் என்பது நல்ல செய்தி. அதற்குள் இந்தச் சந்திப்பு குறித்து எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்புகிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்வது ''நான் பாஜக மட்டுமல்ல; எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை'' என்று வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x