சசிகுமார் நடித்த ஃப்ரீடம் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

சசிகுமார் நடித்த ஃப்ரீடம் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
Updated on
1 min read

இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் ஃப்ரீடம் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியீட்டுள்ளனர்.

சசிகுமார் நடிப்பில் நந்தன் திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து சசிகுமார் ஃப்ரீடம் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில், லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சசிகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ஃப்ரீடம் படத்தின் கிளிம்ப்ஸ்ஸை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இலங்கை அகதிகள் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறுப்படுகிறது. படத்தின் ரீலிஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில், மழை இரவில் காட்டுக்குள் பெரும் வாகனங்களின் அணிவகுப்பு ஒன்று வருகிறது. பின்னணியில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் உலகம் முதல் முறையாக ஒரு மனித வெடிகுண்டைப் பார்த்தது என்று ஆங்கிலத்தில் குரல் ஒலிக்க கைகள் கட்டப்பட்ட நிலையில் வாகனத்தில் நிற்கவைத்து அழைத்துச் செல்லப்படும் பெண் ஒருவரின் முகம் காட்டப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து ஓல இசையில், அரசியல் கட்சியின் கூட்டம் ஒன்றில் குண்டுவெடித்து வெள்ளை உடையில் இறந்த உடலின் ஷூ அணிந்த கால் காட்டப்படுகின்றது. திரையில் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலான கதை என்ற எழுத்துக்கள் காட்சியாகின்றன.

தொடர்ந்து ஆண்கள், பெண்கள் என பலரை போலீஸ் அடிக்கும் காட்சிகள் அடுத்தடுத்த வர, சசிகுமார் கைதியாக குத்த வைத்து உட்கார்ந்திருக்கிறார். அவரிடம் போலீஸ் அதிகாரி நீங்க எல்லாம் இந்தியாவுக்கு எதுக்குவர்றீங்க உங்களுக்கு என்ன வேணும் என கேட்கிறார்..

சசிகுமார் தலைநிமிர்ந்து பார்க்க ஃப்ரீடம் என படத்தின் தலைப்பு காட்சியாக்கப்பட்டிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in