‘என்னை சதியில் சிக்க வைக்க முயற்சி’ - வீடியோ வெளியிட்டு நடிகர் பாலா புகார்

‘என்னை சதியில் சிக்க வைக்க முயற்சி’ - வீடியோ வெளியிட்டு நடிகர் பாலா புகார்
Updated on
1 min read

தமிழில் ‘அன்பு’, ‘காதல் கிசு கிசு’, ‘வீரம்’, ‘அண்ணாத்த’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகரும் இயக்குநர் ‘சிறுத்தை’ சிவாவின் தம்பியுமான பாலா, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இவர், கடந்த 2010-ல் பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக அம்ருதாவும் பாலாவும் பிரிந்துவிட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், நடிகர் பாலா மீது கொச்சியில் உள்ள கடவந்திரா போலீஸில் அவரின் முன்னாள் மனைவி அம்ருதா புகார் அளித்தார். அதில், தன்னையும் தன் மகள் பற்றியும் சமூக வலைதளங்களில் நடிகர் பாலா அவதூறு கருத்துகளைப் பரப்பி வருவதாகக் கூறியிருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலா பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை நடிகர் பாலா வெளியிட்டுள்ளார். அதில், அவர் வீட்டு வாசலில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் நிற்கிறார், அருகில் நிற்கும் இளைஞர், வீட்டின்ஹாலிங்பெல்லை அழுத்துகிறார். சிறிது நேரம் அங்கு நின்று விட்டு கதவு திறக்காததால் அவர்கள் செல்கின்றனர். இதுபற்றி நடிகர் பாலா, “இந்தசம்பவம் குறித்து போலீஸுக்கு தகவல் கொடுத்துவிட்டேன். அதிகாலை 3.45 மணிக்கு என் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளனர். என்னை ஏதோ ஒரு வலைக்குள் சிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது” என்று கூறியுள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in