Published : 19 Jun 2018 01:04 PM
Last Updated : 19 Jun 2018 01:04 PM

‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்துக்காக 5 அதிரடி சண்டைக் காட்சிகள்

‘விசுவாசம்’ படத்தில் அஜித்துக்கு 5 அதிரடி சண்டைக் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.

சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்துவரும் படம் ‘விசுவாசம்’. அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தில், யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.

மதுரையைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை இருந்தாலும், ஷூட்டிங் முழுவதும் செட்டில்தான் நடைபெறுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் அல்ல. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ராஜமுந்திரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். இரண்டு பாடல்கள் ஏற்கெனவே படமாக்கப்பட்டுவிட்டன. வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார்.

இந்தப் படத்தில் மொத்தம் 5 அதிரடி சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. திலீப் சுப்பராயன் இந்த சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். இதில், ஒரு சண்டைக் காட்சி மட்டும் படமாக்கப்பட்டுள்ளது. இது, காமெடி நிறைந்த, அதேசமயம் அனல் பறக்கும் சண்டைக் காட்சியாகவும் அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x