‘ஜீப்ரா’ பட போஸ்டர்
‘ஜீப்ரா’ பட போஸ்டர்

பான் இந்தியா த்ரில்லரில் சத்யராஜ், பிரியா பவானி சங்கர்

Published on

சத்யராஜ், பிரியா பவானி சங்கர் நடிக்கும் பான் இந்தியா த்ரில்லர் படத்துக்கு ‘ஜீப்ரா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களில் நடக்கும் மூன்று கதைகளைக் கொண்ட இந்தப் படத்தை ‘பெண்குயின்’ ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார்.

அரசின் அதிகாரமிக்க உலகில் நிகழும், நிதிக்குற்றங்களை ஆராயும் படம் இது. மூன்று வெவ்வேறு கதைகள் ஒன்றாக இணையும் இதில், தமிழில் இருந்து சத்யராஜ், தெலுங்கில் இருந்து சத்யதேவ், கன்னடத்தில் இருந்து தனஞ்செயா நடித்துள்ளனர். மற்றும் ஜெனிஃபர் பிசினாடோ, சுனில் வர்மா, சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் சார்பில், எஸ்.என்.ரெட்டி, பாலசுந்தரம், தினேஷ் சுந்தரம் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில் அக். 31-ம் தேதி வெளியாகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in