Published : 13 Jun 2018 16:39 pm

Updated : 13 Jun 2018 16:39 pm

 

Published : 13 Jun 2018 04:39 PM
Last Updated : 13 Jun 2018 04:39 PM

மைனஸ் 9 டிகிரி குளிரில் படப்பிடிப்பு: மயங்கி விழுந்த சயீஷா

9

மைனஸ் 9 டிகிரி குளிரில் படப்பிடிப்பு நடந்தபோது, நடுக்கம் தாங்காமல் மயங்கி விழுந்துள்ளார் சயீஷா.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - கோகுல் இணைந்துள்ள படம் ‘ஜுங்கா’. இதுவரை விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே, இதுதான் அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. எனவே, மற்ற தயாரிப்பாளர்களுக்கு சிரமம் கொடுக்காமல், தானே தயாரித்துள்ளார் விஜய் சேதுபதி. நடிகர் அருண் பாண்டியன் இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.


பாரிஸில் வசிக்கும் தாதாவாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக சயீஷா மற்றும் மடோனா செபாஸ்டியன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். விஜய் சேதுபதியின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணனும், நண்பனாக யோகிபாபுவும் நடித்துள்ளனர்.

டட்லி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ‘ஆகாயம் தாண்டியும் கூட்டிப்போ கூடவே...’ என்ற பாடல் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. விஜய் சேதுபதி, சயீஷா இருவரும் இதில் நடித்துள்ளனர். இந்தப் பாடலை, மைனஸ் 9 டிகிரி குளிரில் படம்பிடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் ஸ்வெட்டர் போன்றவைகளால் உடலை மூடிக்கொள்ள, சயீஷாவுக்கு மட்டும் மாடர்ன் ட்ரெஸ்ஸில் நடிக்க வேண்டிய கட்டாயம். ஒருகட்டத்தில் குளிரைத் தாங்க முடியாமல் மயங்கி கீழே விழுந்திருக்கிறார் சயீஷா. அவருடைய உதடுகள் நீலநிறமாகத் தொடங்கிவிட்டன.

உடனடியாக காரில் ஏற்றி அவரை மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், சிறிது தூரம் சென்றதுமே காரை நிறுத்தி, ‘நான் ஹீட்டரில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு, மீதமுள்ள காட்சிகளில் நடிக்கிறேன். என்னால் படப்பிடிப்பு பாதிக்கப்படக் கூடாது’ என்று சொல்லி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் சயீஷா.


தவறவிடாதீர்!

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author