Published : 05 Jun 2018 09:57 AM
Last Updated : 05 Jun 2018 09:57 AM

தெலுங்கு ‘காலா’வின் நேரம் குறைப்பு

ரஜினிகாந்த் நடித்து, பா.இரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ திரைப்படம் வரும் 7-ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

தனுஷ் தயாரிப்பில் வெளியாக உள்ள இப்படத்தில் நானா படேகர், சமுத்திரகனி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் தணிக்கை முடிவடைந்துள்ளது.

இதில் 14 இடங்களில் தணிக்கை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. படத்துக்கு ‘யூ/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ‘காலா’ தமிழ் படம் 166 நிமிடம் (2.46 மணி நேரம்) திரையிடப்பட உள்ளது. தெலுங்கு ‘காலா’வில் 3 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x