Published : 27 Jun 2018 02:00 PM
Last Updated : 27 Jun 2018 02:00 PM

“அஜித்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி” - விவேக்

‘அஜித்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி’ எனத் தெரிவித்துள்ளார் விவேக்.

அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் ‘விசுவாசம்’. ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், விரைவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மதுரையை பின்னணியாகக் கொண்ட கதை என்றாலும், ஹைதராபாத் மற்றும் ராஜமுந்திரியில் செட் போட்டு படமாக்க இருக்கிறார்கள்.

அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் விவேக்கும் இணைந்துள்ளார். “அன்பு நண்பர் அஜித்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்திய ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றிகள். எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விவேக்.

கவுதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படம்தாம், அஜித்துடன் சேர்ந்து விவேக் கடைசியாக நடித்த படம். இதுவரை 12 படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருட தீபாவளிக்குப் படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x