Published : 20 May 2018 10:08 AM
Last Updated : 20 May 2018 10:08 AM

சிவகார்த்திகேயனின் திட்டம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள ‘சீமராஜா’ படம் ரிலீஸுக்கு தயாராகிவரும் நிலையில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் ஒப்பந்தமாகியுள்ள புதிய படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்த இரு படங்களையும் இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் உருவாக உள்ள ‘விஞ்ஞானி’ படத்தில் கவனம் செலுத்த உள்ளார்.

அடுத்து விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடித்துப்போக அதையும் உறுதிசெய்து, தனது அடுத்த படப் பட்டியலில் இணைத்திருக்கிறார். விரைவில் அதற்கான அறிவிப்பு இருக்கும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x