இயக்குநர் சுசீந்திரனின் ‘2K லவ் ஸ்டோரி’ படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் சுசீந்திரனின் ‘2K லவ் ஸ்டோரி’ படப்பிடிப்பு நிறைவு!
Updated on
1 min read

சென்னை: இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் ‘2K லவ் ஸ்டோரி’ படத்தின் படப்பிடிப்பு 38 நாட்களில் நிறைவடைந்துள்ளது. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சிட்டி லைட் பிக்சர்ஸ், தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக உருவாகும் திரைப்படம் ‘2K லவ் ஸ்டோரி’. 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாகியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. வெட்டிங் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.

அறிமுக நடிகர்கள், ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜான் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்மையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட காலகட்டத்திற்கு முன்பாகவே 38 நாட்களில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் இமான் இணையும் 10 வது திரைப்படம் இது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in