Published : 18 Aug 2014 10:00 AM
Last Updated : 18 Aug 2014 10:00 AM

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இன்ஜினீயர் வேலை

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சுரங்கத் துறையில் ஜூனியர் இன்ஜினீயர் டிரெய்னி பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடங்கள்: 157

வயது: 01.08.2014 அன்று 30 வயது மிகாதவராக இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி வகுப்பினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓபிசியினருக்கு மூன்று ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைகளின் படியான சலுகை உண்டு.

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சுரங்கப் பொறியியலில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதித் தேர்வு எழுதி முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினரும் ஓபிசியினரும் 60 சதவீத மதிப்பெண்களும் எஸ்சி/எஸ்டி வகுப்பினர் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: ரூ. 300. இதை எஸ்பிஐ ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பித்தல்: உரிய தகுதியுடையவர்கள் www.nlcindia.com என்னும் இணைய முகவரியில் ஆன்லைனில் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 2 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பின்னர் அதன் பிரிண்ட் அவுட்டைத் தேவையான சான்றிதழ்களுடன் செப்டம்பர் 10 தேதிக்குள் The Deputy General Manager (Hr), Recruitment Cell, Human Resource Department, Corporate Office, Neyveli Lignite Corporation Limited, Block-1, Neyveli - 607801, Tamilnadu என்னும் முகவரிக்கு கிடைக்கும்படி, உறையின் மீது APPLICATION FOR THE POST OF JUNIOR ENGINEER TRAINEE (MINING) GRADE S-1 என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: >http://www.nlcindia.com/careers/advt_junior_trainee.pdf

முக்கிய தேதிகள்:

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: காலை 10 மணி, 2014, ஆகஸ்ட் 13

ஆன்லைன் விண்ணப்பம் நிறைவுபெறும் தேதி: மாலை 5 மணி, 2014, செப்டம்பர் 2

விண்ணப்பம் வந்துசேர வேண்டிய தேதி: மாலை 5 மணி, 2014 செப்டம்பர் 10

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x