சிவகார்த்திகேயன் படத்தில் பிஜு மேனன்

சிவகார்த்திகேயன் படத்தில் பிஜு மேனன்

Published on

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தை ஸ்ரீ லட்சுமி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். வித்யுத் ஜம்வால், விக்ராந்த் என பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இதில் மலையாள நடிகர் பிஜு மேனன் இணைந்துள்ளார். இதைப் படக்குழு அறிவித்துள்ளது. இவர் வில்லனாக நடிப்பார் என்று தெரிகிறது. பிஜு மேனன் தமிழில், ‘மஜா’, ‘தம்பி’, ‘பழனி’, ‘அரசாங்கம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in