காந்தஹார் விமான கடத்தல் வெப் தொடரில் அரவிந்த்சாமி

காந்தஹார் விமான கடத்தல் வெப் தொடரில் அரவிந்த்சாமி

Published on

கடந்த 1999-ம் ஆண்டு டிச. 24-ம் தேதி ‘ஐசி 814’ என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்குக் கிளம்பியது. 179 பயணிகள், 11 ஊழியர்கள் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு கடத்தப்பட்டது.

200 மில்லியன் அமெரிக்க டாலரை இந்தியா தர வேண்டும். இந்தியச் சிறைகளிலிருக்கும் 36 தீவிரவாதிகளை நிபந்தனைகளின்றி விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைத் தீவிரவாதிகள் வைத்தனர். அப்போதிருந்த வாஜ்பாய் அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 3 முக்கிய தீவிரவாதிகளை விடுவித்து, விமானத்தை மீட்டது.

இந்தக் கதையை மையமாக வைத்து ‘ஐசி 814: தி காந்தஹார் ஹைஜாக்’ என்ற பெயரில் வெப் தொடரை நெட்பிளிக்ஸ் தளம் உருவாக்கியுள்ளது. இதை பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கியுள்ளார்.

இவர், ரா.ஒன்., முல்க், ஆர்டிகிள் 15, தப்பட் என பல படங்களை இயக்கியவர். இதில் விஜய் வர்மா விமானியாக நடித்திருக்கிறார். நஸ்ருதீன் ஷா, பங்கஜ் குமார், தியா மிர்ஸா உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் அரவிந்த் சாமி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆக.29-ல் இத்தொடர் வெளியாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in